நாடு முழுதும், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 26) நடக்கிறது. இதையடுத்து, அத்தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 24) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 65.50 சதவீத வாக்குகள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் வெயில் காரணமாக வாக்கு சதவீதம் குறைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகள் உட்பட, கர்நாடகாவில் 14; ராஜஸ்தானில் 13; மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் 8; மத்திய பிரதேசத்தில் 7; அசாம் மற்றும் பீஹாரில் 5; சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3; மணிப்பூர், திரிபுரா, ஜம்மு – காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
பா.ஜ.க., சார்பில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி., சசி தரூருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க., இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இரண்டாவது முறையாக பெங்களூரு தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர்களை தவிர நட்சத்திர வேட்பாளர்களான நடிகை ஹேமமாலினி மற்றும் ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் ஆகியோர் பா.ஜ.க., சார்பில் உத்தர பிரதேசத்தின் மதுரா மற்றும் மீரட் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை நாட்டு மக்கள் விரும்புவதால் மீண்டும் பாஜகவுக்கே தங்களது வாக்கு என ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலாக ஒலித்து வருகிறது.