மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (மே 07) வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
வாக்களித்த பின் வெளியே வாகனம் இருக்கும் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் பிரதமர் மோடி. அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் இருப்பதை கவனித்த பிரதமர் மோடி அப்பெண்ணை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மாற்றுத்திறனாளி பெண் பிரதமரின் கையை பிடித்தார், இதனை கவனித்த எஸ்.பி.ஜி. அதிகாரி அப்பெண்ணை தடுக்க முயன்றார். ஆனால் பிரதமர் மோடி, எஸ்பிஜி அதிகாரியை தள்ளிப்போகச் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்பிஜி பாதுகாப்பை மீறி மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.