முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குடிநீர் வரி, சொத்துவரி, பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஏழை, எளிய மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், திராவிட மாடல் அரசு மீண்டும் ஒரு அதிர்ச்சியை மக்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டணமாக இருந்த தத்து ஆவணங்களுக்கு 1000 ரூபாய் கட்டணம் ஆகவும், ரூ.20 கட்டணமாக இருந்த ஒப்பந்த ஆவணங்களுக்கு 200 ரூபாய் கட்டணமாகவும், ரூ.50 கட்டணமாக இருந்த ரத்து பத்திரங்களுக்கு 1000 ரூபாய் கட்டணமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வால் பொதுமக்களை மீண்டும் துயரத்தில் தள்ளியுள்ளது இந்த திராவிட மாடல் ஆட்சி.