அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (மே 13) 4ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள்.இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் எழுச்சியை ஏற்படுத்துவார்கள்.
அனைவரும் தங்கள் கடமையை நிறைவேற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.