பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசி ஆட்சியராக உள்ளவர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம் உள்ளார். அவரிடம் தான் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை, ராஜலிங்கத்தின் தாய்-தந்தை பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மே 14ல் வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் உள்ளார். ராஜலிங்கத்திடம் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தான், பிரதமர் மோடியின் வேட்புமனுவை பெற்ற ராஜலிங்கம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது ராஜலிங்கம் தமிழகத்தை சேர்ந்தவர். தென்காசி மாவட்டம் தான் அவரது சொந்த ஊராகும். திருச்சி என்ஐடியில் பொறியியல் படிப்பை முடித்த அவர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐஏஎஸ் ஆகி வாரணாசி ஆட்சியராக பொறுப்பு வகிப்பது தெரியவந்தது.
பிரதமர் மோடியிடம் வேட்பு மனு வாங்கிய வாரணாசி ஆட்சியர் ராஜலிங்கத்தின் தாய்-தந்தை அதனை பெருமை என்று கூறியுள்ளனர். ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா, -தாய் மகேஷ் மாலையம்மாள் ஆகியோர் கூறும்போது, பாரத பிரதமரிடம் வேட்புமனு வாங்கியது எங்களுக்கும் பெருமை, தென்காசி மாவட்டத்துக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பெருமை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.