5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் : 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

5-ம் கட்டமாக இன்று (மே 20) நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.

இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருவதை காணமுடிகிறது.

 இன்று நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் பாஜக சார்பில் உத்தர பிரதேசம் லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர்.

இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 47.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார் -45.33 %, மகாராஷ்டிரா- 38.77 % மேற்கு வங்காளம்- 62.72 %, ஒடிசா 48.95 %, ஜார்கண்ட்- 53.90 %, ஜம்மு காஷ்மீர்- 53.90 %, லடாக்- 61.26 %, உத்தரபிரதேசம்- 47.55 சதவீதம் வாக்குகள் என பதிவாகியுள்ளது. முழுமையான வாக்கு சதவீதம் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top