ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு : ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (மே 20) வெளியிட்டுள்ளது. துருக்கி நாட்டு ட்ரோன்மூலம், விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து அந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போனதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியனும் உயிரிழந்தார்.

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைஷி. இவர், அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று (19.05.2024) ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டெஹ்ரான் நகரில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜோல்பாவில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிபர் இப்ராஹிம் ரைஷியுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்துள்ள நிலையில், எரிந்த சாம்பலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிக்கென 32 மலையேறும் வீரர்களை துருக்கி அரசு அனுப்பியது. அந்நாட்டு ட்ரோன் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்தது. தற்போது உடல்களை சேகரிக்கும் பணி நடக்கிறது. விரைவில் அனைத்து உடல்களையும் மீட்டுக் கொண்டு வரும் பணியில் துருக்கி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top