ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று (மே 19) உயிரிழந்தார். அவருடன் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சரும் உயிரிழந்தார். அவர்களின் உயிரிழந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
இப்ராஹிம் ரைஸியின் மறைவால் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்; இந்தியா, ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹின் ரைஸின் பங்களிப்பு நினைவுகூரப்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.