செங்கல்பட்டு அருகே சிறு மழைக்கே பிரேக் பிடிக்காமல் ஓடிய தமிழக அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை (மே 20) விபத்து நடந்திருப்பது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே போன்று செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்துள்ளது. அப்போது செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்துகள் பிரேக் பிடிக்காததால் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தேய்ந்து போன டயர்களை மாற்றாமல் அப்படியே இயக்கிவந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இத்துப்போன பேருந்துகளுக்கு டிஜிட்டல் பலகை தேவையா? என திராவிட மாடல் அரசுக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.