ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மக்களவைத் தொகுதியில் நேற்று (மே 20) நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், 56.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றாலே பயங்கரவாத தாக்குதல் தினமும் நடைபெற்று வரும். இதனால் மக்கள் அஞ்சிய நிலையிலேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அதிலும் பயங்கரவாதத்தால் கடுமையான பாதிப்பை பாரமுல்லா மாவட்டம் சந்தித்து வந்தது.
இதற்கிடையே கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கடுமையான நடவடிக்கையை எடுத்தார். இதனால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையே மீண்டும் 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அதன் பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370வது பிரிவை அதிரடியாக நீக்கினார். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியது. சுற்றுலாப்பயணிகளின் வருகையால், தனது பொலிவினை இழந்திருந்த காஷ்மீர் மீண்டும் புதுப்பொலிவை பெற்றது. அது மட்டுமின்றி பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 370வது பிரிவு ரத்துக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், 56.7 சதவீதம் வாக்காளர்கள் நேற்று நடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இந்த சாதனைக்கு எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி திட்டங்களே காரணம் என அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் போது நாட்டிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதன்மையானதாக திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.