ஆந்திராவில் கடந்த மே 13ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் ஈவிஎம் இயந்திரத்தை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திரா மாநிலம், மச்சர்லா தொகுதியில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் நுழைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி, அங்கிருந்த ஈவிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திவிட்டு சர்வ சாதாரணமாக வெளியே செல்லும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது அதிகமான வன்முறையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்தான் செய்தனர் என அம்மாநில மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஈவிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய எம்.எல்.ஏ., மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.