பௌர்ணமியை முன்னிட்டு மாதம் தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம்.
அதே போன்று இன்று (மே 23) பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பக்தர்கள் பேருந்து நிலையத்துக்கு சென்றனர். அங்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததை அறிந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் புதிய ரயில் இயக்குவதை அறிந்த பக்தர்கள் உடனடியாக ரயில் நிலையம் சென்று ரயில் மூலமாக திருவண்ணாமலைக்கு சென்றனர்.
பௌர்ணமிக்கு கோவில் செல்வதை தடுக்கும் விதமாக திமுக அரசு சிறப்பு பேருந்துகளை நிறுத்திவிட்டதா என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பியுள்ளனர். மத்திய அரசு அறிவித்த ரயில் இருந்ததால் நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலத்தில் பங்கேற்க முடிந்தது என்று சென்னை பக்தர்கள் கூறியுள்ளனர். இனிமேலாவது, பௌர்ணமி தினத்தில் அதிகளவிலான சிறப்பு பேருந்துகளை திராவிட மாடல் அரசு இயக்க வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.