பாஜகவின் தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக சுற்றி வரும் தகவல் போலியானது. பாஜகவின் அதிகாரபூர்வ அறிவிப்பாணை போன்ற ஒன்றில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் உத்தரவின்பேரில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், பிரஷாந்த் கிஷோர் நியமனம் பற்றி அறிவித்ததாக பரவி வருவது போலி.
பாஜகதான் மீண்டும் வெற்றிப்பெறும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியிருந்த நிலையில், பாஜகவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்ற பொய்யான தகவல்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வருவதை மக்கள் அறிவார்கள்.