யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு மீடியாவில் பணிபுரிந்த முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், இவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இயக்கியதாகவும் எனவே அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து, காங்கிரசார் மனு அளித்தனர்.
இது போன்று,எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தங்களின் வெற்று விளம்பரத்திற்காக, தேசிய கட்சியின் மாநிலத்தலைவர் மீது புகார் கொடுப்பவர்களை குறைந்தது ஆறு மாதமாவது சிறையில் தள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் ஆதாரமின்றி புகார் அளிக்க தயங்குவார்கள் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.