சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். இன்று ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வழிபாடு செய்தார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மயிலாப்பூர் அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார்.
பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.