கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் வேலை இல்லாமல் இளைஞர்கள் அவதியுற்று வருகின்றனர் என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் அம்பலமாகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை இன்று வரை உருவாக்கவில்லை. இதனால் இளைஞர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையே நீடித்து வருகிறது.
இந்தநிலையில், ஜனவரி மற்றும் மார்ச் காலாண்டில், 15 முதல் 29 வயதினர் மத்தியில் நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பின்மையை கொண்டிருந்த மாநிலமாக கேரளா இருந்தது என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் அம்பலமாகியுள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை 31.8 சதவீதமாக இருந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜம்மு காஷ்மீரும், மூன்றாவது இடத்தில் தெலங்கானாவும் அதிக வேலைவாய்ப்பின்மையுடன் இருக்கிறது.