தமிழக போக்குவரத்துத் துறைக்கும், காவல்துறைக்கும் சண்டை: அமைதியாக வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து காவலர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும் என்பது உத்தரவாக உள்ளது. எனவே, இந்த சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே பெரிய அளவில் விரிசலை  உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை- புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து காவலர் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

சென்னையில் ‘நோ பார்க்கிங் ‘ ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திடீரென அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு துறைகளில் உள்ளவர்கள் இப்படி வெளிப்படையாக சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஆனால் இதனை கவனிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அமைதியாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இனியாவது விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா என்று பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top