பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும் என்பது உத்திரவாக உள்ளது. எனவே, இந்த சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே பெரிய அளவில் விரிசலை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து காவலர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 17 பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் சீட் பெல்ட் அணியவில்லை என 3 அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இப்படி காவல்துறைக்கும், அரசு போக்குவரத்து துறைக்கும் மோதல் பெரிதாக வெடிக்கும் முன்பாக நடவடிக்கை எடுக்குமா இந்த நிர்வாக திறமையற்ற திராவிட மாடல் அரசு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.