கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில் அருகில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக கடைகள் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரிக்கு நேற்று (மே 30) பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பகவதி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, ஏன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன? எனது வருகைக்காக கடைகளை அடைத்திருந்தால் உடனடியாக திறக்கச் சொல்லுங்கள் என்று உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனே அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக கடைகளை திறக்க ஏற்பாடு செய்தனர். சிறிது நேரத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகளுக்காக உடனடியாக கடைகளை திறக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு வியாபாரிகள் தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.