இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு; கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலையால் தமிழகம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பலரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டு நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதே போன்று நேற்று (மே 31) இரவு 9 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், அடிக்கடி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடுமையான அவதி அடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திராவிட மாடல் ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு எப்படி தெரியும் யாராவது துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தால் அதனை அப்படியே சிறுபிள்ளை போன்று செய்தியாளர்கள் மத்தியில் படித்து விட்டு செல்கிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top