திருநெல்வேலியில் நடந்து சென்ற சிறுவனின் பூநூல் அறுப்பு : தழிழ்நாடு பிராமண ஸ்மாஜம் கண்டனம்

திருநெல்வேலியில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடந்து சென்ற பிராமண சமூகத்தை சேர்ந்தவரின் பூநூலை அறுத்த அடையாளம் தெரியாத நபர்களின் செயலை தமிழ்நாடு பிராமண சமாஜம் வன்மையாக கண்டிக்கிறது என அதன் மாநிலத் தலைவர் நா.ஹரிஹரமுத்து ஐயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 21ம் தேதி மாலை 4.30 மணி அளவில் திருநெல்வேலி, தியாகராஜ நகர் பகுதியில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மகனை பூநூல் அணிந்து வரக்கூடாது என மிரட்டி அவரது பூநூலை வலுக்கட்டாயமாக இழுத்து அறுத்த அடையாளம் தெரியாத நபர்களின் செயலை தமிழ்நாடு பிராமண சமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் 460/2024 தேதி 21.09.2024 20.45 மணி நேரத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூநூலை அறுப்பது கோழைத்தனமான செயலாகும். பூநூல் என்பது ஹிந்து சமூகத்தில் பிராமணர்கள் மட்டும் அல்லாது பல சமூகத்தினராலும் புனிதமாக போற்றப்படுவதாகும். புனிதமாய் போற்றப்படும் பூநூலை அறுப்பது என்பது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் எங்கள் மத உரிமைகளை பாதிக்கும் செயலாகும். மேலும் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 196,298, 299களின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகையை செயல் எங்கள் சமூகத்திற்கு மட்டுமின்றி பூநூல் அணியும் இதர சமூகத்தினர் இடையேயும் அச்சத்தையும், பீதியையும், பாதுகாப்பில்லை என்ற உணர்வையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் இத்தகைய செயல் சமுதாயத்தில் விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியிலும் உள்ளது.

எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின், முதலாம் ஆட்சி காலகட்டத்தில் இதுபோன்று அப்பாவி பிராமணர்களின் பூநூல்களையும் குடுமிகளையும் அறுத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. மீண்டும் அந்த நிலை தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது இந்த செயல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top