இந்தியா டுடே மேற்கொண்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமர் பதவி வகிப்பதற்காக சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாம் இடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். ராகுல் காந்தி 4-ஆம் இடம் பிடித்துள்ளார்.
சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் 5-ஆம் இடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், 6-ஆம் இடத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் உள்ளனர். 8-ஆம் இடம் முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார்.
9-ஆம் இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், 10-ஆம் இடத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் அங்கம் வகிக்கின்றனர்.