அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 06) வெளியானது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது உரையாடலில், “எனது நண்பரான அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன். அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.” இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.