கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் வங்கிகள் மூலம் பெரும் தொகை கடன் பெறுவது முன்பு சிரமமாக இருந்தது. இந்நிலையில் எந்த விதத்திலும் கல்வித் திறன் பெற்ற மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்துக்காக படிப்பு பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் வகையில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்கத் தேவையில்லை. தாங்கள் சேர்ந்துள்ள படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும்.
இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர உள்ள 7 லட்சம் புதிய மாணவர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்துக்காக 2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்துக்கு ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக ஏழைக் குடும்பங்களில் பிறந்து நன்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த திட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 860 நிறுவனங்களில் சேர்ந்து பயில இடம் கிடைத்தால், மேற்கண்ட மாணவர்கள் இத்திட்டத்தில் கல்விக்கடன் பெற்று பயனடையலாம். அதன்படி, ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
மேற்கண்ட மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், 75 சதவிகித மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் ரூ.7.50 லட்சம் கடன் வழங்கப்படும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றால், 3 சதவிகித வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது. இதன் மூலம் 8 லட்சம் வருமானத்துக்கு உட்பட்ட ஏழை மாணவர்களுக்கு முழு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தில், மாணவர்கள் எளிமையான முறையில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழுக்க முழுக்க வெளிப்படையான முறையில் கடன் தொகை பெறும் நடைமுறை உள்ளது. மாணவர்களுக்காக பிரத்யேகமாக டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதியும் உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த தளமான “பிஎம்-வித்யாலட்சுமி” தளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்
முந்தைய ஆட்சிக் காலங்களில் கல்விக் கடன் தொகையை ஏழை மாணவர்கள் நினைத்துப் பார்க்க முடியாது. சிபாரிசுடன் செல்பவர்களுக்கே வழங்கப்பட்டது. அதிலும் இதில் ஏராளமான அரசியல் வாதிகளின் தலையீடுகள் இருந்தன. தகுதி இல்லாதவர்கள், குறைந்த கல்வித் திறன் கொண்டவர்கள் அதிகம் பயன் பெற்றதுடன் அளித்த கடனை வங்கிகளால் திரும்பப் பெற முடியாத சூழல்கள் நிலவின.
ஆனால் 2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அரசு அமைந்ததும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் கொண்டு வரப்பட்டதும் எல்லாம் வெளிப்படையாக அமைந்தன. இப்போது இந்த திட்டத்துக்கு சிகரம் வைத்தால் போல ஏழை மாணவர்கள் வங்கிகள் மூலம் பெரும் தொகை கடன் பெற வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது ஏழை மக்களின் வாழ்வில் மாபெரும் கல்வி ஒளியை ஏற்றி வைத்துள்ளது. இனி எந்த மாணவர்களுக்கும் உயர் கல்வியைப் பெறுவதில் நிதி ஒரு தடையாக இருக்காது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
ஏழைக் குடும்பங்களில் பிறந்து கல்வித் திறன் பெற்ற மாணவர்களுக்காக இந்த அற்புத திட்டத்தை வழங்கிய பிரதமர் அவர்களுக்கும், அவரின் அரசுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
பாஜக மாநில துணைத்தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர்