மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 30 கிமீ மைலேஜ் தரும் நானோ காரின் புதிய அப்டேட் மாடலை வெளியிட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களும் பயன் அடையும் வகையில் இரண்டு சக்கர வாகன விலைக்கே காரை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் நானோ ஆகும். இது ரத்தன் டாடாவின் கனவு கார் ஆகும். நடுத்தர மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற இந்தக் கார், புதிய வடிவமைப்பில் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்புற மறுவடிவமைப்பு நகர்ப்புற நடைமுறையை வலியுறுத்துகிறது, நெரிசலான நகர வீதிகள் மற்றும் நெரிசலான வாகன நிறுத்துமிடங்களில் சூழலை கருத்தில் கொண்டும், நவீனமயமாக்கப்பட்ட ஹெட்லைட் வடிவமைப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டப்பட்ட உடல் வடிவம் ஆகியவற்றுடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
624 சிசி பெட்ரோல் என்ஜினுடன், சிறந்த செயல்திறனை கொண்டுள்ள புதிய நானோ கார், ஒரு லிட்டருக்கு 25 முதல் 30 கிலோமீட்டர் என்ற எரிபொருள் செயல்திறனை அளிக்கவல்லது. மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்துடன் செல்லும் வகையில், காரின் வடிவமைப்புகள் கச்சிதமாக உள்ளன.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட லெக் ரூம், நான்கு பெரியவர்கள் வசதியாக செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விலை ரூ.2.5 லட்சத்தில் தொடங்குகிறது. இது தற்போதைய சந்தையில் மலிவான விலைதான். கார் சந்தையில் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விலை என்றே சொல்லலாம்.
புதிய நானோ கார் சந்தைக்கு திரும்புவது, இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் கார் கனவை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்கின்றனர் டாடா நிறுவனத்தார். சாமான்ய மக்களும் கார் வாங்க வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் கனவை மேலும் உறுதி செய்யும் வகையில் புதிய நானோ கார் சந்தைக்கு வந்துள்ளது. ரத்தன் டாடா மறைந்தாலும் அவரது சமூக சேவையும், தேசத்தின் மீதான பாசமும் இந்த பூமி உள்ளவரை அவரது பெயரை சொல்லும்.