இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்; நமது தேசத்திற்கு அத்வானி ஜி செய்த சிறந்த சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில், ஒருவர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரின் அறிவுத்திறன் உள்ளிட்ட பன்முகத்தன்மைக்காக எப்போதும் மதிக்கப்படுகிறார்.
அவரின் வழிகாட்டுதலைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.