பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமை மற்றும் சேவை மனப்பான்மை, உயர்ந்த குணங்களுக்காக 17 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு வழங்கிய நாடுகளின் பெயர்களை பார்ப்போம்:
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா கடந்த 2016ல் கிங் அப்துல் அஜீஸ் சாஷ் விருது வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தான் கடந்த 2016ல் அமீர் அமானுல்லா கான் விருதை வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான பாலஸ்தீன் கடந்த 2018ல் கிராண்டு காலர் விருது வழங்கியுள்ளது.
தென்கொரியா கடந்த 2018ல் பீஸ் பிரைஸ் விருது வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 2019ல் ஆர்டர் ஆஃப் சையத் விருது வழங்கியுள்ளது.
ரஷ்யா கடந்த 2019ல் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான மாலத்தீவு கடந்த 2019ல் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான பஹ்ரைன் கடந்த 2019ல் கிங் ஹமத் ஆர்டர் விருது வழங்கியுள்ளது.
அமெரிக்கா கடந்த 2020ல் லெகன் ஆஃப் மெரிட் விருது வழங்கியுள்ளது.
ஃபிஜி கடந்த 2023ல் கம்பேனியன் ஆஃப் ஆர்டர் விருது வழங்கியுள்ளது.
பப்புவா நியூ கினி கடந்த 2023ல் ஆர்டர் ஆஃப் லோகோஹீ விருது வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான எகிப்து கடந்த 2023ல் ஆர்டர் ஆஃப் நைல் விருது வழங்கியுள்ளது.
பிரான்ஸ் 2023ல் லெகன் ஆஃப் ஆனர் விருது வழங்கியுள்ளது.
கிரீஸ் 2023ல் ஆர்டர் ஆஃப் ஆனர் விருது வழங்கியுள்ளது.
பூடான் 2024ல் ஆர்டர் ஆஃப் ட்ரக் கியால்போ விருது வழங்கியுள்ளது.
டொமினிகா 2024ல் அவார்ட் ஆஃப் ஆனர் விருது வழங்கியுள்ளது.
தற்போது நேற்று முன்தினம் நைஜீரியா நாடு, அந்நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவில் பதவியில் இருந்த பல பிரதமர்களுக்கு இப்படி உலகளாவிய உயர் விருதுகள் கிடைக்கப்பெற்றதில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அத்தனை உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.