25-12-1924 -அன்று -அடல்ஜி குவாலியரில் பிறந்தார். 93-வது வயதில் 16-08-2018 அன்று டெல்லியில் காலமானார். கான்பூர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர பிரசாரகராக இருந்தவர். பாரதிய ஜனசங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராக இருந்தவர். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தலைவர். அவரது கவிதையும், பேச்சும் எதிரிகளையும் கவரும் சக்தி பெற்றவைகள். 10 முறை பாராளுமன்ற உறுப்பினர். 2 முறை ராஜ்ய சபா உறுப்பினர். 3 முறை பாரதப் பிரதமர். அவரது பேச்சுத் திறமையை அறிந்த நேருவே ‘அடல்ஜி ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார்’ என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். நேரு இறந்த போது, அடல்ஜியின் பார்லிமென்ட் பேச்சு கவிதைபோல் அற்புதமாக அமைந்தது.
1939 இல் ஆர்எஸ்எஸ் உடனான அவரது முதல் தொடர்பு ஏற்பட்டது. பாபாசாகேப் ஆப்தேவின் தாக்கத்தால் தன்னை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். சில் இணைத்துக் கொண்டார். 1947ல் பிரசாரக் ஆனார் அவர் உத்தரபிரதேசத்திற்கு விஸ்தராக (ஒரு தகுதிநிலை பிரசாரக்) ஆக அனுப்பப்பட்டார் மற்றும் விரைவில் தீன்தயாள் உபாத்யாயாவின் செய்தித்தாள்களில் பணியாற்றத் தொடங்கினார்: ராஷ்ட்ரதர்மா (ஒரு இந்தி மாத இதழ்), பாஞ்சன்யா (ஒரு இந்தி வார இதழ்), மற்றும் தினசரிகள் ஸ்வதேஷ் மற்றும் வீர் அர்ஜுன். போன்ற இதழ்களில் பணியாற்றினார்.
1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி பாரதிய ஜனசங்கம் என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது. கட்சியை கட்டமைக்க பண்டிட் தீனதயாள் உபாத்யாயவிற்கு உதவி புரிவதற்காகவே, சங்கத்திலிருந்து மேலும் இருவர் அனுப்பி வைக்கப்பட்டார்கள். தென்னக பகுதிகளில் கட்சியின் அமைப்பு உருவாக்குவதற்காக ஜெகனாதராவ் ஜோசியும், வட பகுதிக்கு அடல்பிகாரி வாஜ்பாயும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். இத்துடன் ஏற்கனவே ரஷ்ட்ர தர்மா மற்றும் பாஞ்சசைன்யா பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து தீனதாயள் ஜீ விலகி, மேற்படி பொறுப்பு அடல் பிகாரி வாஜ்பாயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.சில் உள்ள சுயம் சேவர்கள் போல் ஜனசங்கத்தின் காரியகர்த்தர்களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உபாத்யாயாவிடம் ஏற்பட்டதே ஆலமரம் போல் கட்சி வளர முக்கியமான காரணமாகும். தீனதாயள் உபாத்யாயவிற்கு முற்றிலும் துணையாக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய்.
பாரதிய ஜனசங்க கட்சியின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் உதவியாளராகவும் ஆனார். 1957-ல் நடைபெற்ற இரண்டவாது நாடாளுமன்ற தேர்தலின் போது வாஜ்பாய் மக்களவைக்குத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் மதுராவில் ராஜா மகேந்திர பிரதாப்பிடம் தோற்றார், ஆனால் பல்ராம்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். லோக்சபாவில் வாஜ்பாயின் பேச்சுத்திறன் பிரதமர் நேருவை மிகவும் கவர்ந்தது.
பத்திரிகையில் பணியாற்றிய போது, இந்தியாவில் இஸ்லாம் மதத்தின் வரலாறு குறித்துக் கடுமையாக விவாதித்தார். அதன் பிறகு பஞ்ச்ஜன்யா உள்ளிட்ட, வலது சாரி இயக்கங்களின் நான்கு பதிப்புகளின் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர், பசு பாதுகாப்பு, இந்து குடும்ப சட்டம், உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு முறைகள் மற்றும் இந்து மதம் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் வெளியான பர்சாத் (மழை) என்ற பிரபல பாலிவுட் திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் ஒழுக்கக்கேடான வகையில் இருந்ததாகக் கருதி அதைக் கண்டித்த வாஜ்பாய், குழந்தைகள் அந்தப் படத்தைக் காணத் தடை விதிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
1951-ல் துவக்கப்பட்ட பாரதிய ஜனசங்கத்தின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்கு மகத்தானது. காஷ்மீருக்குள் நுழைய வேண்டுமானால், மாநில அரசின் அனுமதி பெற்றே உள்ளே வர வேண்டும் என உத்திரவிட்டதை எதிர்த்து பாரதிய ஜனசங்கம் சத்தியாகிரகம் செய்தது. கட்சியின் தலைவர் ஷியமா பிரசாத் முகர்ஜி போக முடியாத இடங்களுக்கு வாஜ்பாய் சென்று மக்களை திரட்டினார். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் வாஜ்பாயின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதே போல் 1955-ல் கோவா விடுதலை போராட்டம் பற்றியது. 1955- ஆகஸ்ட் 15-ம் தேதி திரு ஜெகனாத ராவ் ஜோஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் தன்மையை பொது மக்களிடம் விளக்குதற்காகவே வாஜ்பாய் தென்னிந்திய பகுதிகளில் இதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
1960- அக்டோபர் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து வெளிநாடுகளில் குறிப்பாக கிழக்கு மத்திய ஆப்ரிக்க நாடுகளில் விளக்குவதற்காக நான்கு பேர்கள் கொண்ட குழு அனுப்பட்டது. மேற்படி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் வாஜ்பாய் ஒருவர். மேற்படி பயணத்தின் போது, இரண்டு விதமான நிகழ்ச்சியில் வாஜ்பாய் கலந்து கொண்டார். ஒன்று அரசாங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும், மற்றொன்று, பாரதிய சுயம்சேவ சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். பிஎஸ்எஸ் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் வெளிநாடு இந்தியர்களுக்கான அமைப்பாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, Daily Nation of Nairobi என்ற பத்திரிக்கை தனது தலையங்கத்தில் வாஜ்பாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை விமர்சனம் செய்து எழுதியிருந்தது.
மே 1964 இல் நேரு மறைந்தபோது, கவிதை உரைநடையில் வாஜ்பாய் இவ்வாறு கூறினார்: “…கனவு சிதைந்தது, ஒரு பாடல் மௌனமானது, எல்லையற்ற தீப்பிழம்பு மறைந்தது… பாரத மாதா (தாய் இந்தியா) இன்று துக்கத்தில் வாடுகிறார். -1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு வங்கதேசம் உருவான பிறகு, வாஜ்பாயின் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அப்போதைய பிரதம மந்திரியை துர்காதேவி என்று வர்ணித்தார், இது, இந்து சமய சமயங்களில் பிரபலமான தெய்வங்களில் வெற்றிக்கான பெண் தெய்வம் துர்கா தேவி ஒன்றாகும். முரண்பாடாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு 1975 இல், அந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திரா காந்தியால் அவசரநிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். 1977-78ல் மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த அவர், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது தாய்மொழியான இந்தியில் உரையாற்றிய முதல் நபர் ஆனார். அவர் ஒருமுறை சவுத் பிளாக் (பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள) தாழ்வாரத்திலிருந்து நேருவின் படத்தைக் காணவில்லை என்பதைக் கவனித்திருந்தார். பின்னர், படம் அதன் அசல் இடத்தில் வைக்கப்பட்டது.
1965 பிப்ரவரி 23-ம் தேதி நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில், கட்ச் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த வீரர்களுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சுமார் 13,000 ஏக்கர் நிலத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாக கேள்வியை எழுப்பியவர் வாஜ்பாய். அரசு தரப்பிலிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டினார். ஆனாலும் இங்கிலாந்து பிரதமர் வில்சன் ஆலேசனையின் படி இந்தியாவும், பாகிஸ்தானும் ஓர் ஒப்பந்தம் செய்ய ஒப்புக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அதாவது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இந்த ஒப்பந்தம் இருப்பதாக கூறி, வாஜ்பாய் மற்றும் தீனதயாள் உபாத்தியா தலைமையில் டெல்லியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
1984 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. குறைவான இடங்களில் வெற்றி பெற்றதைப் பற்றி, ஒரு முறை பார்லிமெண்டில் அடல்ஜி கர்ஜித்தார்: ’நான் இங்கு சொல்வதை அனைவரும் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் எங்களைக் குறைவான எம்.பி./எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி என்று கேலியாகச் சிரிக்கிறீர்கள். ஆனால் அதிக எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சியாக இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும் நாள் வந்தே தீரும். அப்போது இந்திய மக்கள் உங்களைப் பார்த்துச் சிரித்து, கேலி செய்வார்கள்!’
13 நாள் பிரதமராக இருந்த வாஜ்பாய் பார்லிமெண்ட்டில் மிகவும் உருக்கமாகப் பேசியது சரித்தம் படைத்த உரையாகும். அப்போது, ராம் விலாஸ் பாஸ்வான், ‘நானும் ராம் தான்’ என்று பி.ஜே.பி.யின் ஹிந்துத்வாவைக் கிண்டல் செய்யும் போது, அடல்ஜி ‘நீங்கள் ராம் தான் -ஆனால், காமத்திற்கு வசப்பட்ட ராம்’ என்று சூடாகச் சொன்னார். ராம் விலாஸ் பாஸ்வான் ஏக பத்தினி விரதர் இல்லை என்பதை அடல்ஜி நாசுக்காகச் சுட்டிக் காட்டினார்.
காஷ்மீரில் தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான அமெரிக்கா பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது. மசோதாவின் மீதான விவாத்தில் இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால், அந்த மசோதா ஐ.நாவில் வெற்றி பெற்று விடும் என்பதையும் அடுத்த இரு நாட்கள் ஐ.நா.விற்கு விடுமுறையாக இருப்தால், அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடை இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற தகவல் இந்திய குடியரசு தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவும், பிரதமர் நரசிம்மராவும் ஆலோசித்து, ஐநா விவகாரத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவராக வாஜ்பாயே சிறந்தவர் என்றும் அவரையே அனுப்பலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை தனி விமானத்தில் ஐ.நா. கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
ஐநாவில் கலந்து கொள்ளும் முன் பத்திரிக்கையாளர்களிடம், எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்தை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு. அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டிருக்கின்ற மசோதவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால், இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என தெளிவாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக முடிவெடுக்காத பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின. மசோதா தோல்வி கண்டது. இது வாஜ்பாயின் ராஜதந்திர செயலுக்கு எடுத்துக் காட்டாகும்.
இரட்டை உறுப்பினர் பிரச்சினையின் காரணமாக ஜனதா கட்சியிலிருந்து அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன் சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு ஏப்ரல் 4, 1980 அன்று மொரார்ஜி தேசயின் ‘சமரசத்தை’ நிராகரித்தது, அதற்கு பதிலாக, அனைத்து முன்னாள் பிஜேஎஸ் தலைவர்களையும் கட்சியில் இருந்து நீக்க தீர்மானித்தது. இது வாஜ்பாய், அத்வானி மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்தது. 5-6 ஏப்ரல் 1980 இல், இரண்டு நாள் தேசிய மாநாட்டில், முன்னாள் பிஜேஎஸ் உறுப்பினர்கள் டெல்லியில் கூடி, வாஜ்பாய் அதன் ஸ்தாபகத் தலைவராக இருந்த பிஜேபி என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கத் தீர்மானித்தனர். கட்சி சொந்தமாக வந்ததால் அது அதன் பயணத்தில் ஒரு மைல்கல்லாக மாறியது, மேலும் வாஜ்பாய் இந்திய அரசியல் ஸ்பெக்ட்ரமின் மறுக்கமுடியாத தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கட்சி திரும்பிப் பார்க்காமல், முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்று வாஜ்பாய் கருதினார்.
சீனா தொடர்பான ஜவஹர்லால் நேருவின் கொள்கையை தொடர்ந்து விமர்சிப்பவராக இளம் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்தார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை 1959 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இது எல்லையின் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது: லடாக்கின் மேற்குப் பகுதி, அக்சாய் சின் பீடபூமி உட்பட; இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் நடுத்தரத் துறை, இது ஒரு சிறிய தகராறு; மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்குத் துறை. இந்த வேறுபாடுகள் வெளிப்பட்டதால், ஜனசங்கமும், வாஜ்பாயும் ஒரு அங்குல நிலத்தை அரசு தரக்கூடாது என்று வலியுறுத்தினர். 1960 ஏப்ரலில் சீனப் பிரதமர் சூ என்லாய் புது தில்லிக்கு பேச்சுவார்த்தைக்காக வந்தபோது, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லத்திற்கு வெளியே ஜனசங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர் அடல் பிகாரி வாஜ்பாய்.
முஸ்லீம்கள் பற்றிய வாஜ்பாய் கண்ணேட்டம் ஒரு வித்தியமானது. முஸ்லிம் பிரச்சனையை காங்கிரஸ் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் திருப்திப்படுத்தும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் என்ன விளைவு? இந்நாட்டு முஸ்லிம்களை மூன்று வழிகளில் நடத்தலாம். ஒன்று ‘திராஸ்கர்’ அதாவது அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களை விட்டு விடுங்கள், அவர்களை வெளிநாட்டவர் என்று நிராகரிக்கவும். இரண்டாவதாக, காங்கிரஸும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களும் செய்து வரும் ‘புருஷ்கார்’ திருப்திப்படுத்தல், அதாவது, நடந்துகொள்ள லஞ்சம் கொடுப்பது. மூன்றாவது வழி ‘பரிஷ்கர்’ அதாவது அவர்களை மாற்றுவது, அதாவது, அவர்களுக்கு சம்ஸ்காரங்களை வழங்குவதன் மூலம் அவர்களை பிரதான நீரோட்டத்திற்கு மீட்டெடுப்பது. அவர்களுக்கு சரியான சம்ஸ்காரங்களை வழங்கி அவர்களை மாற்ற விரும்புகிறோம். அவர்களின் மதம் மாறாது. அவர்கள் தங்கள் சொந்த மதத்தை பின்பற்றலாம். முஸ்லீம்களுக்கு மெக்கா புனிதமாக தொடரலாம் ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதமானதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யலாம், நீங்கள் ரோஜாவை வைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் மெக்கா அல்லது இஸ்லாம் மற்றும் இந்தியா இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமானால் நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா முஸ்லீம்களுக்கும் இந்த உணர்வு இருக்க வேண்டும்: இந்த நாட்டிற்காக மட்டுமே வாழவும், சாகவும் அவர்கள் முன்வர வேண்டும் என்று கூறினார். அவரது ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் வளர்ச்சிக்கான பொற்காலம்.
இவரும், தீனதயாள்ஜியும் காட்டிச்சென்ற பாதையில் இன்று பிரதமர் மோடி நாட்டை செவ்வனே வழி நடத்துகிறார் என்றால் அது மிகையல்ல.
– ஈரோடு சரவணன்