‘‘அன்புள்ள நண்பரே!’’ -அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க இந்த பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் 47-வது அதிபராகும் அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு என் வாழ்த்துகள். இன்னொரு முறை நாம் இணைந்து இரு நாடுகளை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வோம். இந்த பதவிக்காலம் சிறப்பானதாக அமையட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top