அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் (ஜனவரி 20) பதவியேற்றார். இந்த விழாவில் நமது இந்திய அரசு சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி நேற்று (ஜனவரி 20) அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
அதே போன்று இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதையும், அன்பையும் வைத்திருப்பவர் டொனால்ட டிரம்ப் என்பதை நாம் அறிவோம். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.