முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை வெட்டுவேன் என்று புறப்பட்ட முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்காத காவல்துறை ஏன் இந்துக்களுக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி என மதுரை, பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசினார்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில்  மதுரை பழங்காநத்ததில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது:

ஸ்டாலின் அரசாங்கம் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று தெரியாமல் போய்விட்டது. வெறும் டீசர் தம்பி., இன்னும் மெயின் பிக்சர் இருக்கு. ஒரு மதவாத அமைப்பு ஒரு முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மற்றும் ஏன் இவ்வளவு கெடுபிடி. இதுதான் உங்க சமசார்பற்ற தன்மையா? கழுத்துல ஆட்டுக்குட்டியை போட்டுக்கொண்டு கையில் சேவலை வைத்துக்கொண்டு நமது புனிதமான திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு வெட்டுவேன், கோழி வெட்டுவேன் என்று சொன்னபோது வேடிக்கை பார்த்த காவல்துறை, ராமநாதபுரத்தில் இந்துக்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு எம்.பி.,யான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலை மீது பிரியாணி சாப்பிட்டபோது வேடிக்கை பார்த்த காவல்துறை இன்று மலையின் புனிதத்தை காப்பாற்ற போராடும் இந்துக்கள் மீது வழக்கு. இந்த ஆட்சி 2026 வரைக்கும் தான் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆட்சி. 2026க்கு அப்புறம் முருகனின் ஆட்சி அமையும்.

“ஸ்டாலின் அரசு பயந்தாங்கொள்ளி அரசு என்பது தெரியாமல் போய்விட்டது. இது டீசர். மெயின் பிக்சர் இனிமேல் தான் வரப்போகிறது. இந்த டீசரில் இந்து முன்னணி கதாநாயகன். மெயின் பிக்சரில் ஒவ்வொரு இந்துவும் கதநாயகனாக இருப்பார்கள். இந்துக்களே இன்னும் ஒரு வருடம் பொறுத்துக்கொள்ளுங்கள் அதுக்கு அப்புறம் இந்த அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *