துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துரு புடிச்சு இத்துப்போய்விட்டதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளது. வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கரு கலைப்பு செய்த ஆட்டோ ஓட்டுனர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் அரசு பள்ளி மாணவியை போட்டோ எடுத்து வர்ணித்து பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதுபோன்று பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக எண்ணற்ற குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் குற்றம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என வெட்டி வீரவசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் அந்த இரும்புக்கரத்தை துருப்பிடிக்க வைத்து விட்டாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top