டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதியில் 67ல் டெபாசிட் இழந்தது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதனிடையே மொத்தமுள்ள 70 இடங்களிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கிய காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெற தகுதியை பெற்றனர். கஸ்தூரிபா நகரின் அபிஷேக் தத் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்த ஒரே காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். இந்த பட்டியலில் நாங்லோய் ஜாட்டைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி மற்றும் பத்லியைச் சேர்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோரும் அடங்குவர். பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜக அல்லது ஆம் ஆத்மிக்கு பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஆனால் சில இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களுக்கு பின்னால் 4வது இடத்தில் இருந்தனர்.
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் தேவேந்தர் யாதவ் பாத்லி தொகுதியில் மூன்றாவது இடத்தையும், மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கல்காஜியில் மூன்றாவது இடத்தையும், முன்னாள் அமைச்சர் ஹாரூன் யூசுப் பல்லிமரனில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மூன்றாவது முறையாக டெல்லி பேரவை தேர்தலில் ஒரு சீட் கூட பெறமுடியாமல் முட்டை வாங்கியது.
காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே பாஜக கார்யகர்தாக்களின் பேச்சாக உள்ளது.