ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா

ராம ஜென்ம பூமிக்காகவும், ஹிந்து சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகான் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் என ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் : ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தன்னுடைய 20வது வயதிலிருந்தே அயோத்தியில் ஸ்ரீராம பிரானுக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தவர். ராம ஜென்ம பூமி அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் அமைவதற்காக தொடர்ந்து பணியாற்றியவர். ஸ்ரீராமர் ஆலய பிராண பிரதிஷ்டை வைபவம் உலகளவில் கொண்டாடப்படும் வகையில் அந்நிகழ்ச்சிக்காக முழுமையாக பணியாற்றியவர்.

பங்களாதேஷில் இஸ்கான் அமைப்பினர் மீதும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தின் மீதும் அங்குள்ள ஹிந்து விரோதிகள் தாக்குதல் நடத்திய போது அதை கண்டித்து பாரதத்தில் இருந்து முதல் கண்டனத்தை பதிவு செய்த ஹிந்து சன்யாசி ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் அவர்கள்.

ராம ஜென்ம பூமிக்காகவும், ஹிந்து சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகான் அவர்.

அவரை இழந்து வாடும் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய அர்ச்சகர்கள், சிப்பந்திகள், ஸ்ரீராம பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல ஸ்ரீராமபிரானின் திருவடிகளில் நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி. இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top