காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

உலக வானொலி நாளான இன்று (பிப்ரவரி 13) அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில்; வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றால் பலருக்கும் காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருகிறது. செய்தி மற்றும் கலாச்சாரம் முதல் இசை மற்றும் கதை சொல்லல் வரை, படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இது விளங்குகிறது.

வானொலி உலகத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்காக உங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top