இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு மக்களின் வளர்ச்சி அவசியம். இந்தியாவில் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கு நல்ல தலைவர்கள் நமக்கு தேவை. முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட எந்தவொரு நாட்டிற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்ல, மனித வளங்களும் தேவை. நாம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறையில் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். இன்று ஒவ்வொரு இந்தியரும் 21ம் நூற்றாண்டின் வளர்ந்த இந்தியாவுக்காக இரவும், பகலும் உழைக்கிறார்கள்.

இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு துறையிலும் வலுவான தலைமை அவசியம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top