உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் கலந்து கொண்ட தலைவர் அண்ணாமலை புனித நீராடினார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று (பிப்ரவரி 22) தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு பிரயாக்ராஜில் புனித நீராடினார். இதுகுறித்து தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டமான மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டதற்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.