தமிழகத்தில் நேற்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், 17,633 மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வை புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 4 ஆயிரத்து 107 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 9.26 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 17,633 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திராவிட ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் தமிழ் மொழித் தேர்வை 17633 மாணவர்கள் புறக்கணிக்கும் நிலையில்தான் இவர்களின் கல்விக்கொள்கையின் லட்சணம் உள்ளது. அது மட்டுமின்றி நேற்று கொடுக்கப்பட்ட வினாத்தாளில் ஒரு சில கேள்வி தவறாக இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்தால் எப்படி தமிழக கல்வித்துறை விளங்கும் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.