பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சென்னை, மண்ணடியில் என்.ஐ.ஏ., சோதனை!

பெங்களூரு ,ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், ராமநாதபுரத்தில் உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் வீட்டில் இன்று (மார்ச் 27) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும்,சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம் ,தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் ஷேக் தாவூத் வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top