யுகாதி பண்டிகையை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுகாதி என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர்.
யுகாதி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின்படி, யுகாதி சித்திரை மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.
யுகாதி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், புத்துணர்ச்சி மற்றும் புதுப்பித்தலின் உறுதிமொழியுடன் யுகாதி பண்டிகை புதிய ஆண்டைக் கொண்டு வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த மங்களகரமான தருணம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.