நீங்கள் பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவை தனது வீடு என்று அழைப்பது அதிர்ஷ்டம். நீங்கள் பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு, அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பல முனைகளில் உறவுகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி இரவு, பகலாக உழைத்து வருகிறார் என்பதை உலகமே தற்போது பாராட்டி வருகிறது.