நகரப் பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு: திராவிட மாடலை பார்த்து அச்சப்படும் மக்கள்!

மகளிருக்கு கட்டணமின்றி பயணிக்கலாம் என ஏற்கனவே இருந்த பழைய பேருந்துகளுக்கு முன் மற்றும் பின்புறத்தில் பெயின்ட் அடித்து ஓடவிட்டுள்ளது திமுக அரசு.

ஆனால் இந்த பேருந்தில் பயணிக்கும் பெண்களை நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே பல பெண்கள் பேருந்தில் ஏறுவதற்கு தயங்குகின்றனர். இதற்கு முன்னர் அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு எல்லாம் ஓசியில் செல்ல பேருந்து விட்டுள்ளோம் என நக்கலாக பேசினார். இவரின் பேச்சுக்கு பெண்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 15) மதியம் ஒரு மணியளவில் நகரப்பேருந்து வட்டாச்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து சாலையில் விழுந்தது. படிக்கட்டின் பின்பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாலையில் விழுந்துள்ள படிக்கட்டை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். மீண்டும் பயணிகளை இறக்கிவிட்டு பின்னர் அதே வழித்தடத்தில் வந்தபோது அப் படிக்கட்டை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் அரசு பேருந்தில் பயணம் செய்யும் மகளிரை அச்சமடைய செய்துள்ளது. இதுப்பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் பேருந்தா என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் அனைத்து துறைகளும் செயல் இழந்துவிட்டதற்கு பேருந்துகளும் ஒரு சாட்சி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top