புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று (ஏப்ரல் 15) இரவு வாகனப் பேரணியில் பங்கேற்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு சாலையின் இருபுறங்களிலும் கூடிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பேரணி குறித்து ஜே.பி.நட்டா தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
எங்கள் சாலைப் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற புதுச்சேரி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட புதுச்சேரியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உறுதி பூண்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நீங்கள் அளித்து வரும் அசைக்க முடியாத ஆதரவுக்கு, இந்த பாசமும், தங்கள் வருகையும் ஒரு சான்றாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.