இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக தீரன் சின்னமலை நினைவுகூரப்படுகிறார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த அவருடைய துணிச்சலான தீரமும் கூர்மையான உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.