கர்நாடகாவில் கல்லூரி மாணவி நேஹா லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா 22; ஹூப்பள்ளியில் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 18ம் தேதி மாலை, கல்லூரி முடிந்து வளாகத்தில் நடந்து சென்றார்.
நேஹாவை வழிமறித்த பயாஸ் 19, என்ற இஸ்லாமிய மாணவர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ஆளும் காங்கிரஸ் அரசு கொலையாளியை கைது செய்தது.
இந்து மாணவி கொலையை கண்டித்து பா.ஜ.க., இந்து அமைப்புகள், ஏ.பி.வி.பி., மாணவ அமைப்பினர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். லவ் ஜிகாத்துக்கு உடன்படாததால், இந்த படுகொலை நடந்தது என பாஜக குற்றம்சாட்டியது.
இதனை மறைக்கும் வேலையில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வந்தது. வடகர்நாடகா முழுவதும் இந்துக்கள் பெரும் எழுச்சியாக திரண்டு லவ் ஜிகாத்துக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் அரசுக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.