சென்னைக்கு ரயில் மூலம் மாத்திரை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது போதை ஊசி போட்டுக் கொண்ட ஒருவர் தள்ளாடி தள்ளாடி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த இளைஞர் கையில் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில், கட்டுக்கட்டாக போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை அம்பத்தூர் நேரு நகரில் உள்ள மலையாளத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது. அவர் ஐதராபாத்தில் உள்ள முன்னா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதனை அடுத்து மனோஜை கைது செய்த காவல்துறையினர் 6,890 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் போதை மருந்து, போதை மாத்திரையால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை எல்லாம் கண்டும் காணாமல் உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திராவிட மாடல் அரசு தற்போது போதை மாடல் அரசாக மாறிவிட்டதா என பொதுமக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.