கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியை தழுவுவதால், தற்போது அமேதியும் பாதுகாப்பு இல்லாததால் ரேபரேலி தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார் என பிரபல ஊடகவியலாளர் அர்நாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும் என அனைத்து ஊடகங்களின் கருத்து கணிப்பும் இருந்தது.
இந்த முறையும் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாத காங்கிரஸ் 50க்கும் குறைவான தொகுதிகளில் கூட வெற்றிப்பெறாது என ஊடகங்கள் தெரிவித்தது. ஏற்கனவே கடந்த 2019ல் நடைபெற்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிதி இரானியிடம் தோல்வியை தழுவியவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என தெரிந்ததால், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இ.ண்.டி. கூட்டணியை அமைத்துள்ளது. இவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக பல மாநிலங்களில் தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றனர்.
அதே போன்று வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி அங்கு போட்டியிட்டுள்ளது. அங்கு பாஜக சார்பில் வலுவான வேட்பாளர் களம் இறங்கியுள்ளார். எனவே அங்கும் தோல்விதான் கிடைக்கும் என ராகுல் காந்தி இருப்பதால் உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பிரபல ஊடகவியலாளர் அர்நாப் கோஸ்வாமி கருத்து கூறியிருப்பதாவது: காங்கிரஸ் பரப்புரை ஜெர்மனி மற்றும் ஜெர்மனியை தழுவிய யூடியூப் பரப்புரை யாக மாறிவிட்டது. வயநாடு தொகுதியில் 8 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்து விட்டதால்அங்கு வெற்றி பெறுவது இல்லாத காரியம், அமேதியும் பாதுகாப்பு இல்லை, இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்பது உறுதி என்பதால் ரேபரேலி தொகுதிக்கு ஓடி விட்டார் ராகுல் காந்தி என்றார்.