பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கொடியுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்நாடு ராணுவத்தை அதிகளவு அப்பகுதியில் குவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் மீட்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார். இவரது பேச்சால் பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகளவு படைகளை குவித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா நிச்சயம் மீட்கும் என பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில் அங்கு சமீப நாட்களாக அதிகளவில் படைகளை குவித்து வருகிறது பாகிஸ்தான். படைகள் குவிக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்கள் போராட்டம், தற்போது மக்களுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையேயான மோதலாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தி பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். விரைவில் இந்தியாவுடன் தங்களை இணைத்துவிட வேண்டும் என்ற அம்மக்களின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் மூன்றாவது முறை பதவியேற்றவுடன் நிறைவேற்றுவார் என்பது மட்டும் உறுதி.