நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 13) பீகார் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, பின்னர் அங்குள்ள உணவுக் கூடத்தில் உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.