கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் அரசு தடுப்பணை கட்டி வருவது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
சிலந்தி ஆறு, அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும். இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள கம்யூனிஸ்ட் அரசின் செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை திராவிட மாடல் அரசு ஏன் தடுக்கவில்லை என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விவசாயிகளுக்கு தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அநீதி இழைத்து வருகிறார் என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கர்நாடகா காங்கிரஸ் அரசு, ஆந்திர அரசு, கேரள அரசு முழுவீச்சில் ஈடுபடுகிறது. ஆனால் அவர்களை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கக்கூட முதல்வர் ஸ்டாலின் அஞ்சி நடுங்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.